பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரி விளையாட்டு


உப்புப் பொரிந் துதிரும்
உவர்மண் ணிடிந்த சுவர்
தப்பி நிமிர்ந் தெழுந்தால்
தலையிடிக்கும் தாழ் கூரை

மக்கி யழிந்து வரும்
வறுமை வளர் சிறுகுடிசைப்
பக்கத்தில் விளையாடும்
பாலகனைப் பாரீரோ !

கந்தலொரு கெளபீனம்
கண்டவுடல்; மற்றும் அனல்
சிந்தும் வெயில் கடுங் குளிரே
சிறுவனுக்கு மேற் போர்வை;

சிரங்கு சொரியுங் கை;
செம்பட்டை யானதலை;
உறங்கி விழுங் கண்கள்;
உலர்ந்த சிறு கன்னங்கள்

குந்தியவ னுட்கார்ந்து
கூவிடவே ஓடியங்கு
வந்த சிறுமி யவள்
வரிசைதனைக் கேளீரே;

19