பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் பார்த்தாளோ மாலையிலே காவிரியின் மணல் திட்டில் பாங்கியுடன், சோலைமயில் போல்திரிந்தாள் சுரநாட்டு மகளவளும் கரையழியா வகைகாக்கும் காற்றிலசை நானல்வளர் ஒரு புதரில் இருந்தேநான் ஓயாமல் பார்த்திருந் தேன்அவளென்னைப் பார்த்தாளோ? அன்பெல்லாம் அறிந்தாளோ? அறியாமல் வாடுகின்றேன்; அறிய வழி காணேனே. இரவினிலே விளக்கணத்து இன்துயிலுக் கேகிடுமுன் விரிநிலவும் நாணிடவே வினைமுடித்த சாளரத்தே எட்டியவள் பார்த்து நின்ருள்; ஏங்குமுளம் துடிதுடிக்க நட்டநடு வீதியிலே நானிருந்து பார்த்து நின்றேன்அவளென்னைப் பார்த்தாளோ? அன்பெல்லாம் அறிந்தாளோ? அறியாமல் வாடுகின்றேன்; அறிய வழி காணேனே. á't á