பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரத் திருநாள் கனவிலும் கருத்திலும் கண்டநற் பாரதம் இதுவோ? எண்ணுவீர், என்னுடன் பிறந்தீர், அடிகளார் இதற்கோ ஆருயிர் ஈந்தார்? மிடிமையும் பிணியும் மிகுந்துநாம் வாடப் புண்ணியன் காந்தி விண்ணகத் துறையினும் எண்ணருஞ் சாந்தி எய்தி இருப்பரோ? அழியாப் பண்பும் ஆண்மையுங் கொண்ட பழம்பெரும் மரபுடைப் பாரதத் துதித்த இளைஞர்காள் எழுமின்! இனியொரு கணமும் தளர்வுற் றிருப்பது சற்றும் தகாது. உன்னத மென்றே உலகெலாம் வியக்க இன்னலும் பிணியும் இன்னவென்றறியா மக்கள் நூருண்டு வாழ்ந்துநல் லின்பமே மிக்கவோர் குடும்பமாய், வேற்றுமை யின்றி, இன்பமும் ஒன்றே, ஏற்றமும் ஒன்றே: துன்பம் வரினும் ஒன்றென அதனை ஒழித்திட முனையும் ஒருமனப் பாங்குடன் தழைத்திடு சமூகமும் தண்ணளி வாழ்வும் நாட்டிட எழுமின் நாணினிப் பொறுக்கேன். நாட்டினை நமக்கு மீட்டுத் தந்ததோர் அண்ணலின் பேரில் ஆணையிட் டுரைத்தேன், விண்ணக மாயிது விளங்கிடச் செய்வோம்; வாழிய பாரதம் மாய்கவெந் துயரெலாம்! வாழிய பாரதம்! வந்தே மாதரம்: 1?? 1ł