பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருக அன்னய் வருக அன்னுய் வருக! பயங்கர நாமிநீ வருக! மூச்சினில் சாவினை மூட்டும் தேவியே, அடிமலர் அதிர்ச்சியால் அண்டம் பொடிக்கும் காலகாலி நீ வருக! வருக அன்னய் வருக! மிடிமையை எதிர்த்தே மிடுக்கொடு நிற்போன் சாவினை விருப்புடன் தழுவவே முந்துவோன் ஊழிக்கூத்தினில் உளமகிழ்ந் தாடுவோன் அவனையே தேடி அன்னைவந் திடுவாள். சுவாமி விவேகானந்தர் வாக்கின் பெயர்ப்பு.