பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தி வெள்ளி நாள் முழுதும் பூ முழுதும் தும்பியை நீ வீடு சேர்ப்பாய் சலித்த கூலிக்காரனை வேலையினின்றும் விடுவிக்கிருய் வானத்து மணி ஒன்று சாந்தி பொழிகின்ற அது நீதான். 1தென்ருல் உயர்ந்த வானிலிருந்து சாந்தியை அனுப்புகிருய் வானத்தின் உயிர்ப்பும் புருவமும் மனங்கொண்ட காதலியின் உயிர்ப்பும் புருவமும்போல இனிமையாக விளங்கும் காலத்தில் நீ தோன்றுகிருய் நிலத்திலிருந்து வாசனை யெழுந்து பரவுங் காலத்தில் செழித்த வானத்திற்கு வருகிருய். அப்பொழுது தொலைவில் வரும் மந்தைகளின் அரவம் கேட்கிறது வேலை முடிந்து பாடும் குதுகலப்பாட்டின் இன்னிசை உலவுகிறது கூரையின்மேல் அமைதியாகப் புகை சுருண்டு - சுருண்டு எழுகிறது. 1. 8 l