பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரி விளையாட்டு


கந்தல் அவன் ஆடை,
கன்னிக் கதுவு மில்லை;
இந்த உலகில் வந்த
இயல்தோற்றம்கொண்டிருந்தாள்--

அன்புடனே கூடி அவர்
அரிதாக மண் சேர்த்துச்
சின்னச் சுவர் எழுப்பிச்
சிற்றில்ல மாக்கி யதில்

பனங் கொட்டை யொருநான்கு,
பாதையிலே கண்டெடுத்த
கனங் கெட்ட லாட மொன்று,
கண்ணாடித் துண்டிரண்டு,

ஓடையிலே போயெடுத்த
உருண்டைக்கல் லிருமூன்று,
ஓடொன்று கூழ் காய்ச்ச--
ஒரு குடும்பம் செய்கின்றார்,

மண்ணிலே வீடெடுத்து,
வாழ்க்கையையே விளையாடி,
என்னென்ன இன்பங்கள்
இளங்குஞ்சு கண்டாரோ!

பச்சை மனங் கட்டிவைத்த
பைஞ்சோலை சூழ்மாடம்;
இச்சையெலாம் ஏவு முன்னர்
இனிது செயும் ஏந்திழைகள்;

20