பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேட்டதும் கண்டதும் 麗 குயில்கூவும் காலமதில் கூடியவர் போகையிலே மயில்போன்ற பெண்ணணங்கும் மதன்போன்ற காளையுமாய்க் (குயில்கூவும், 2 பொன்மஞ்சள் கதிர்களெங்கும் பூமிதனிற் படர்ந்திருக்க மின்வண்ண மெல்லிதனை மெதுவா யணைத்தவனும் இன்ப வெள்ளம் நீந்திமிக எழிலாகத் தனிவழியே (குயில்கூவும்) 领 செஞ்சொலிள மைனுவும் செங்கண்சிறைச் செம்போத்தும் கொஞ்சிக்கொஞ்சித் துணைகூவும் கோலமொழி கேட்டானில்லை : விஞ்சியவள் அன்பொழுகும் வார்த்தைசெவி நிறைந்திருந்தான் (குயில்கூவும்) 189