பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்கும் ஏழை யில்லா உலகம் வேண்டும் இன்பம் கூட்டும் அன்பு வேண்டும் பீழை துன்பம் பிணிகள் அறியாப் பெருமை வாழ்வு தழைய வேண்டும் இனிமை தோய்ந்த மொழிகள் வேண்டும் எதிலும் அச்சம் தொலைய வேண்டும் கனிவு குழையும் பார்வை வேண்டும் கருத்தில் என்றும் உயர்வு வேண்டும் பூவைப் போன்ற நகையும் வேண்டும் பொங்கும் எழிலே எங்கும் வேண்டும் தேவை ஏக்கம் சிறுமை சேராச் சில வாழ்வே பொழிய வேண்டும் பழமை யென்னும் பாலை பாய்ந்தே அழித லில்லா அறிவு வேண்டும் பழமை யீன்ற பெருமை யெல்லாம் விழைந்து போற்றும் நிறைவும் வேண்டும் கவிதை இன்பம் கலையின் இன்பம் அவனி யெங்கும் பெருக வேண்டும் புவியின் வாழ்வே அமர வாழ்வாய் போகம் யோகம் இண்ைதல் வேண்டும் 191