பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரி விளையாட்டு


சிறுமியவள் அந்தச்
சிறு வீட்டின் உள்ளிருந்து
உரைத்தாள் ஒரு வார்த்தை
"ஓடிவா, கஞ்சி குடி,

மண் வெட்டப் போகணுமாம்
பண்ணையார் ஏசுகிறார்.”
இன்பமுள்ள விளையாட்டும்
இதுதானே, வேறிலையோ ?

வாழ்க்கை தனிற் புகுந்து
வல்லடிமை தான் செய்து
பாழ்த்த வயிற்றினுக்கே
பசி தீர்த்து மாயுமுனர்

கள்ளமறி யாக்குழந்தைக்
கற்பனையில் ஆண்டானாய்
உள்ளமதில் எண்ணியவர்
உவகையுற லாகாதோ ?

துன்பத்திலே தோன்றித்
தொழும்பே வடிவானோர்க்
கின்ப விளையாட்டும்
இல்லையோ இவ்வுலகில் ?


22