பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிம்மநாதம் செய்யடா சிம்மநாதம் செய்யடா சேர்ந்தெழுந்தே நில்லடா; விம்மும் தோளைப் புடையடா! வெல்கதாய் எனக் கூவடா! (சிம்ம) அன்னை சக்தியின் ஆற்றல் பெற்ருேம் அண்டம் பேர்க்கும் மூச்சுக் கொண்டோம்; முன்னை உலகம் கண்டிராத மொய்ம்பு வீரம் பெற்றுவிட்டோம்! (சிம்ம) பாரதத்தாய் ஏற்றம் பெற்றே பாரின் உயிராய்த் திகழ வைப்போம்; மாருதத்தைப் போல ஒயா வாழ்க்கை வேகம் தாங்கிநிற்போம் (சிம்ம) ஜாதி பேதம் பொருளின் பேதம் சமய பேதம் தள்ளி யென்றும் நீதியொன்றே நினைவு மொன்றே நேர்மையொன்றே ஆக்குவோம்! (சிம்ம) அறிவின் ஆட்சி எங்கும் நிலவ அன்பின் ஆட்சி எங்கும் பொங்க சிறுமை வீழப் புவனம் ஓங்க செயல் புரிந்தே வாழுவோம்! (சிம்ம) --குடியரசுத் திருகாளன்று பாடியது 204