பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விலங்கு கெறி வாழ்வுண்டோ ? என்றெல்லாம் மனக்குகையின் காரிருளில் கீழ்நின்ற பேய்க்கூட்டம் கிளுகிளுக்க எண்ணங்கள் மேலெழுந்து நின்றிடவே வெம்பிமிகச் - சோர்ந்தேன் :சீலம் எதற்கிங்கே ? செந்நெறியும் ஏன் வேண்டும் ? என்றே தளர்வெய்தி ஏங்கிக் கிடந்தேன்நான் குன்றுக்குப் பின்னுெளியும் கும்பிக்க இருள்பரவி அந்திவெள்ளி கண்டேன்; அருமணிகள் பலமெதுவாய் வந்தென்றன் உள்ளத்தை வானுலகம் இழுத்தனவே. இயற்கையின் கீழ்வரம்பில் இந்நெறிதா னென்ருலும் இயற்கைச் சிகரத்தே எழுந்துயரும் மானிடனும் புதுமை நெறியொன்றைப் புகுத்திடவும் கூடாதோ? மதியென்றும் மனமென்றும் வாய்த்ததனிப் பயனென்ன ? திருந்தாப்பேய் நெறிபற்றிச் செல்லுவதிற் சிறப்புண்டோ ? பொருந்தாத விலங்குநெறி போக்கிடவே மதிபெற்ருன் அற்பக்கீழ் உணர்ச்சியெலாம் அறமாற்றித் தெய்விகமாம் நற்பண்பு மானிலத்தே நாயகமாய் நின்றென்றும் _ அன்புநெறி ஆட்சிசெய அவனியற்ற வல்லானேல் இன்பநிலை தோன்றிவிடும்; இதுவே யவன்கடமைஎன்றதொரு பேருண்மை இருள்கிழித்துச் சுடரிடவும் நன்றுள்ளம் பூரிக்க நானெழுந்து நடந்தேனே. 207