பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் தளராதே உள்ளம் தளராதே-என்றும் நீ ஊக்கம் குறையாதே (உள்ளம்) வெள்ளம் புரள்வதுபோல்-இடர்கள் மீறியே வந்தாலும் . தள்ள முடியாமல்-மலையெனச் சங்கடம் நின்ருலும் (உள்ளம்) எங்கும் எதிர்ப்பெனினும்-துணைவரே ஏசி இகழ்ந்தாலும் வெங்கனல் ஈட்டிகளாய்க்-கவலைகள் மேவிடு மென்ருலும் (உள்ளம்) கங்கை கொணர்ந்தவன் போல்-செயலில் கண்ணும் கருத்துமதாய் தங்கும் முயற்சிகொண்டால்-உலகில் சாதிக்கலாம் எதையும் (உள்ளம்) 浣8