பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயில் பண்பழித்து அணுவரக்கப் படைதேடி அஞ்சியஞ்சிக் கலகத்துப் பேயிருட்டுக் கல்மனத்தால் ஐயமெனும் காலனுக்கே மக்களினம் கனப்பொழுதில் இரையாகும் நிலையுற்று விதிர்த்திடினும் நீநிலத்தே எங்களைப்போல் நெடுந்திறல்யார்க் குண்டென்றே நெஞ்சத்தே செருக்குடையோம் பால்சுரக்கும் விஞ்சை நிலாப் பண்கரக்க நீ செய்தாய் பயம்சுரக்கும் சிறு மதியால் படைபடைத்து நாங்களெலாம் மால்சுரக்க நடுங்கியிங்கு வழியறியாக் குருடர்களாய், மானிடத்துப் பெருங்குலமே மாயவகை செய்துள்ளோம் நூல் சுரக்கும் அறிவொளியால் துண்மையழ கின்பமுடன் நுடங்காத பெருவாழ்வே நோன்பாகக் கொள்ளாமல் 227 .