பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கோ ஒரு குழந்தை எங்கோ ஒரு குழந்தை என் செவியில் தீப்பாயப் பொங்கும் துயரோடு பொருமி அழுவதுவமேன்? தாயன்பை அறியாமல் தனிவாடும் மெல்லரும்போ? பேயுள்ளம் படைத்தவர்கள் பிணிக்கண்ணுல் சுட்டாரோ? சிறுவயிற்றுப் பெரும்பசியால் செங்கீரை துவண்டதுவோ? பிறைப்பிஞ்சைக் கொடுமையெனும் பெருநாகம் தீண்டியதோ? வஞ்சனை முள் மனத்தவர்கள் வாய்சிரித்தே அணைத்தாரோ? அஞ்சுதரும் சிறுமைநிறை அவனிவந்த துயர்க்குரலோ? தெய்வத்துச் சுடர்க்குழந்தை சிரிப்பிழந்து முகம்வாடி நையக் கண்டால் அந்தோ நடுங்குகின்றதென் உள்ளம். 286