பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அமரநற் கவிதை

அமரநற் கவிதையின் கற்பனைகளில்-வரும்
ஆநந்தம்போல் வடிவச் சிற்ப மங்கையே
தமரக் குழைவினெடு வெண்முகைப்பொதி-மிகத்
தாங்கிச் சுருண்டு வரும் வாரிய லைபோல்
மோதி யணியணியாய் உள்நிவந்தெழும்-காதல்
மோகனத் தேன் நெருப்பு வீசுமலையால்
பாதி உயிர் குறைந்து வாடியயர்ந்தேன்-உன்றன்
பார்வை மழைக் குருகி ஏங்கிநின்றுளேன்

தூரிகை நாணடைந்து ஓடிஒளியும்-கவிச்
சொல்லுந் தன் நாவிழந்து மாழ்கிநைந்திடும்
காரியம் எங்கள்கையை விஞ்சியதென்றே-உயர்
காவியப் பெருங்கோயில் நற்கலைஞரும்
யாவரும் ஒர்முகமாய்க் கூறவல்லதோர்-தனி
எழிலின் இளம்பருவத் தெய்வ மணியே
பாவினுக் கெட்டாத பண்ணின்சுவையே-என்றன்
பச்சை யுளந்தழைய நோக்கி யருள்வாய்.

238