பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏந்திய கை ஏந்திய கையுடன் வந்தேன்-என்னை ஏனென்றுங் கேளாவுன் கருணைப் பெருக்கைப் பேர்ந்தடி வைத்தக் கணத்தில்-உன்றன் பெருவிழிக் கோணப்புன் ணகையினிற் கண்டேன் காணுத பேருண்மை கண்டேன்-வாழ்வில் கற்றிட வேண்டிய பாடமுங் கற்றேன் நாணுது கைதொட்ட ஒட்டை-ஓரிரு நாலெட்டுச் சுக்கலாய் வீசி உடைத்தேன் ஈதல் உவகையுங் கண்டேன்-உடமை எல்லாம் வழங்கிட வழிபார்த் திருந்தேன் ஆதவன் தோன்றுமுன் கூடி-மக்கள் அணியணியாயுன்றன் வாயிலில் நின்ருர் தேவை யெலாம்பெற வந்தோர்-இருள் சேர்ந்திடும் எல்லையில் அரவம் ஒடுங்கி மேவிப் பலதிசை செல்ல-வானில் மின்சுடர் வந்துதம் பிறவிக்கு முன்னல் புத்தொளிக் கன்னி எழுந்து-தொல்லைப் புதையிருள் ஒடிடச் செய்த பெரும்போர் வித்தக மாக்கதை யெல்லாம்-கேட்டு மெய்மறந் துள்ளன போலவே காணும் அந்தநல் வேளை நான் உன்றன்-அருள் அடியிணை மலர்களில் வந்து பணிந்தே இந்தநல் வீணையை ஏற்று-உயர் இன்னிசை மீட்டென வேண்டுவன் ஐயா (தாகூர் கவிதைத் தழுவல்) 239