பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வானவில் ஊஞ்சல்

வானத்தில் எழுமேழு வண்ணத்து வில்லினில்
வைரக்கால் அறிவொளி
ஊஞ்சலிட்டு
கானத்தில் கந்தர்வம் மோனத்தில் கயிலாயம்
காட்டியே வீற்றிருந்
தாடிடுவோம்
பானத்திற் கின்சுவை அமுதத்தை விஞ்சிய
பால்நிலாக் குண்டலிச்
சாற்றினைய
 தானத்தில் நின்றுாற்ருய் வாங்கியே மாந்திநற்
சாந்தியாம் பெருநிலை
மேவிடுவோம்
தேனெத்த விழிவண்டும் திரளாண்மைத் தோட்
சிறுகுட்டைப் பாசத்தில் -குன்றும்
வீழ்வதனல்
தானெத்த நிலைமேவி நீயின்றி நாணின்றித்
தன்மய மாகும்பேர்
இன்பமெல்லாம்
சீனத்து வெடியாக அரவத்தில் மாயாமல்
செம்மைசேர் துயநல்
லன்பறத்தால்
ஊனத்துக் குறைநீங்கி உள்ளொளி மேலோங்கி
உண்மைக் குழந்தைகள்
ஆகிநிற்போம்.


240