பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை


கடிதம்

நீலவெளி செறியிருளில்
நித்திலத்துக் கற்பனைகள்
கோலமணி உதிர்த்துள்ளேன்
கொள்ளைகொள்ளை வானமெலாம்
ஏட்டுவரி அடங்காமல்
என்னுள்ளம் பொங்கியவை
பாட்டிசையின் கரைதாண்டிப்
பால்நிலவாய்த் தாரகையாய்
எங்குமொளி பரந்தனபார்;
என்னுள்ளச் சுதியதனில்
மங்களமும் குங்குமம்போல்,
மல்லிகையும் மணமும்போல்
ஒன்றிவிடில் நீயறிவாய் -
உன்னிதயத் தில்லையெனும்
மன்றத்துள் நடனமிடும்
வளர்பித்தன் நானலவோ?
அங்குபார் பாழ்வெளியில்
அரிந்துவிழும் மீனென்று:
தங்கவொளித் தீயதுவும்
தனிவாடும் என்னுயிரில்
ஒருமூச்சு நைந்தவியும்
உண்மைதனைக் கூறிடுமே

243