பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலவெளி காலனெனும் உடன்பிறப்பைக் காமஞ்சேர் மாயவனைக் காதலித்துக் கூத்தாடும் களிமயக்கத் தெல்லையிலே நீலப்பாழ் வெளிச்சிறுக்கி நெஞ்சத்தீ மாலையிட்டாள் நிமிர்ந்ததடா துடிமுழக்கம்! நெட்டுயிர்ப்போ? புன்னகையோ? மின்னலிது தோன்றிடவே மேகமாய் நின்றவளுர்? வெறுவெளிக்கும் காலனுக்கும் விசையாக உள்ளவனர்? கன்னலிலே கட்டியவன் கன்னலின்றிக் கர்ண்பரியான் கணக்கறியிற் சதிராடும் காலவெளி சூனியமே. வெளி அல்லது இடம் என்பது ஒன்று. இதன் உடன் பிறப்பாகவே காலம் தோன்றுகிறது. இவை இரண்டையும் கொண்டு பிரபஞ்சங்கள் தோன்றுகின்றன. இடத்திற்கும் அதன் உடன் விளைவான காலத்திற்கும் காரணமாக உள்ள பரம்பொருளே அறியும்போது இவை பிரண்டும் சூனியமாக மறைந்து விடுகின்றன. காலன்-காலம்; காலன் மாயவன். 245