பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவிழந்தபோது வானத்து மின்கொடியே, வாழ்விழந்த பெண்ணமுதே! தேனெத்த நகையிழந்து சிந்தையிலே பாட்டழிந்து இளவேனில் புன்சிரிப்பின் எழில்வடிவம் பூவிழந்து நெளிகாந்தள் அணிவிரலும் நெற்றியெனும் பொன்பிறையில் கொள்ளைகொளும் திலகமிடும் குங்குமத்தைத் தான்மறந்து வெள்ளேயெனும் துயருடையில் வீடென்னும் சிறையடைந்தாய். முத்துதிரும் பேச்செங்கே? மோகனக்கை வீச்செங்கே? சித்தமதில் பித்தெழுப்பும் தீங்கவிதைப் பார்வையெங்கே? நிற்கின்ற நிலையினிலே நெஞ்சள்ளும் அசைவினிலே கற்காமல் பரதநடக் கலைப்பெருமை காட்டியநீ, பெருவுடையார் பெருங்கோயில் ஒவியத்துப் பெண்ணணங்கு 24?