பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் மறவேன் இன்பமெனத் தோன்றித் துன்பமாம் இச்சை யெலாம் புன்மையெனத் தள்ளியின்றே - என்கல் நெஞ்சே புனிதகுரு நாடாயோ? - புன்மையெனத் தள்ளியின்றே புனிதகுரு நாடிவிட்டால் சென்மமிது கடைத்தேறும்-என்கல் நெஞ்சே செயம்பெற்ற வாழ்க்கையுமாம். அறிவொளியும் ஆகமங்கள் அத்தனையும் - காட்டுகின்ற நெறியிதனைப் பற்ருமல்-என்கல் நெஞ்சே நீசவழி ஆடுகின்ருய். - நெறியிதனைப் பற்ருமல் நீசவழி ஆடுகின்ற வெறிபிடித்த குரங்கானல்-என்கல் நெஞ்சே வேலெனக்குத் துணைவருமே. தந்தைக்கு மந்திரத்தைத் தான்புகலும் ஞானசுடர் எந்தையாம் சற்குருவாம்-என்கல் நெஞ்சே எனக்கொளியைக் காட்டிடுவான். எந்தையாம் சற்குருவாம் எனக்கொளியும் காட்டுகின்ற கந்தனருள் மலரடியை-என்கல் நெஞ்சே கணப்பொழுதும் நான்மறவேன். 254