பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 குயிற் குஞ்சு.

கருவண்ணக் கருமூக்கி

 கருமனத்துக் கருங்குரலி

பெருமையாய் வளர்த்துப்பின்

 பிணமாகச் செய்ததென்னே?


மாமரத்தில் இசைக்குயிலுன்

 வண்ணமொழி தான் கேட்டுத்

தேமதுரப் புதுக்குரலில்

 சிறுவீணை மீட்டினையோ?

கந்தருவப் பண்கேட்டுக்

 கண்னொற்றைற்றைக் காகமது சிந்துந்தே னிசை வடிவைச்
 சிதைத்திட்ட தையையோ!

கனவுலகம் தோற்றுவிக்கக்

 காமனர் பாராள 

இனியிங்குத் தோன்றிடுநல்

 லிளவேனில் அழகடைய

ஓங்கு மூன்றன் பாட்டெல்லாம்

 உலகறியா தடங்கினவே வேம்பின் கிளையொன்றில்
 வீடுசெயக் கண்டுவந்த

சோம்பற் சிறுகுயிலி

 சோரஞ்செய் திடுமுட்டை தாங்கிய யடைகாத்துத்
 தன்மகவாய்ப் பேணிமிக்க
             27