பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலிக்கு மாலை மின்னலை வான வில்லில் இழைத்தே-சுடர் மீன்திரள் நவமணிகள் பலநூறு கோத்து சன்னமாய்க் கதிரவன் கம்பிகள் பின்னி-முழு சரத்கால வெண்ணிலாச் சரிகைகள் கட்டி காலவெளி மாயையில் அழியாமல் என்றும்-வளர் கருணையாம் இறைவனின் திருநோக்க மென்னும் மூலமுடி யிட்டுமே நிறையின்பம் கூட்டி-அலை மோதியே நாளெலாம் சலியாமல் பொங்கும் காதல்தேன் ஊறிடும் உள்ளமலர் அவிழும்-மனங் கமழவே கனவெல்லை அமுதோடம் தாண்டி மோதுமென் உணர்வாழி கரையிடும் இன்பம்-உயர் முத்தொளிர் மாலையிது மார்பில் அணிவாய் மின்னல் பூ என்ற எனது கவிதைத் தொகுதியில் வெளி யான இப்பாடல் சில மாறுதல்களோடு இங்கு இடம் பெறு கிறது. இரண்டு கண்ணிகள் புதிதாகச் சேர்ந்துள்ளன. காதலி யின் மாலையிலே எத்தனை கண்ணிகளும் சேரலாமல்லவா? கால வெளி மாயை-காலம் இடம் ஆகியவற்ருல் தோன்றும் பிரபஞ்சமாயை. இறைவனின் திருவருள் இங்த மாயைக்கு அப் பாற்பட்டது. காலவெளி என்ற கவிதையையும் நோக்குக. 説あ? 16