பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓங்குக சுடர் <Poem>உள்ளத்தில் என்னவோ ஒளிந்து நிற்குது ஓசைப் படாமலே-அது

கள்ளத்தில் மேலெழும் காட்டுக் குரங்கினைக் கட்டுக்குள் வைப்பதாம்

ஐம்புல வேடர்கள் ஆட்டக் களிப்பிலும் அயர்வுப் போதினிலும்-சிறு

சம்புக வழிதேடித் தாவிக் குதித்தெழும் தாழிருட் பேய்களையே

மண்டையிற் குட்டியே மாயக் குகை தள்ளி வல்லிரும் பாணியிட்டு-ஒரு

கண்டமும் வாராமல் காக்கும் சுடரது காலத்தும் ஓங்குகவே !<\poem>

260