பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொட்கு நிலா பொட்டுநிலாக் கீழைவானில் வெள்ளி பொங்கவே-செக்கர் வட்டப்பரிதி மேற்கில் நின்று கொட்டும் தங்கமே, பகல்செய் அரசும் மலர்வெண்ணிலவும் சேர்ந்து பார்க்கையில்-பட்ட அகமுந்துளிரச் சோலைக்குயிலின் அமுதம் எழுந்ததே. அந்திவெள்ளி வைரமல்லி அழகு வெடிக்கவும்-தெற்கின் மந்தகாச மென்னப்பிஞ்சுக் காற்றும் வந்ததே. திசைகள்.எங்கும் மயங்கும்இசையில் தேன்து வரித்திடும்-இந்தப் பொசியும்மாய விஞ்சைபோலோர் பொழுதும் வாய்க்குமோ ? உலகம்சொக்கி நறவம்மாந்தி உணர்வி ழந்துமே-குட்டிப் புலவிநீங்கிக் கலவிவிழையும் போதை கொண்டதே. 龙?●