பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குயிற்குஞ்சு

தன்னைப்போற் சிறப்பில்லாத்
தன்மையரை நேசித்து
மன்னுந் திறம்படைத்த
மாண்புடையார்மேலெரிச்சல்

கொள்ளும் உலகத்துக்
கூட்டத்தில் காகமொன்றோ ?
உள்ளம் புழுங்கியவர்
ஓங்குதிறன் தான் நசுக்கும்

சின்னத் தனமெல்லாம்
தெரிகின்ற திங்கேயும்
வண்ணப் பறவைகளின்
வாழ்க்கையிலும் இதுதானே ?

என்றே உலகத்தில்
எல்லோரும் ஒருமனதாய்
நன்றான சீர்த்திறனை
நனியோங்கப்போற்றிடுவார்?

கைவளரா-பறவைக்கு இறக்கைகளே கைகள்.

விண் பாட்டின் மெல்லரும்பு விண்ணிலிருந்து வரும் கந்த
ருவ கரனத்தின் மெல்லிய அரும்பு போன்றது அந்தக் குயிற்
குஞ்சு.

29