பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்கும் தென்ன இளம் பாளை-சிரித்திடும் செவ்வி தவழ் நங்காய் என்னை யுளங் கவர்ந்தாய்-இனிமேல் இன்ப மெலாம் நீயே முல்லை மலர்க் குவைபோல்-விரிந்திடும் முழு நிலவு வேண்டேன் அல்லி மல ரெனவே-திகழுமுன் ஆசை முகம் வேண்டும் வான மகளிரைப் போல்-வளர்சிறு வண்ண மலர் வேண்டேன் கானக் கவிதை துள்ளும்-உனதிரு கண் மல ரேவேண்டும் தென்றற் சிறுமி வந்தே-மெதுவாய்த் தீண்டும் சுகம் வேண்டேன் ஒன்றி யுயிர் கலந்தே-தழுவிடும் உன் னருள் வேண்டுமடி தேவர் விரும் பியுணும்-அமுதின் தீஞ்சுவை நான் வேண்டேன் ஆவல் பெருக் கிடுமுன்-இதழ்தரும் அமுதம் வேண்டுமின்றே. 272