பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தழை மறைவினில் தழை மறைவினில் சிட்டுக்கள் வண்ணச் சந்தங்கள் மீட்டின சந்தங்கள் மீட்டும் படுக்கை விரல்கள் கற்பனை மூட்டின; இழை நரம்பினில் கந்தர்வப் பண்கள் இன்பங்கள் காட்டின இன்பங்கள் காட்டும் மன்மதக் கண்கள் யாழிற்கை கூட்டின. மெல்ல மிதந்திங்கு வந்திடும் காற்று கந்தங்கள் தூவின கந்தங்கள் துவும் கொவ்வைச்செவ்விதழ்கள் தேன்சுவை கூவின; அல்லி மலர்ச்சிறு புன்னகைக் கொள்ளைகள் உள்ளத்தில் மேவின உள்ளத்தில் மேவும் கள்ள உணர்ச்சிகள் வெள்ளத்தில் தாவின. கவிதைக் கன்னத்துக் கிண்ணிச் சுழிகளும் காதலைப் பேசின. காதலைப் பேசும் சிற்றெல்லை தாண்டி எண்ணங்கள் வீசின; 273 17