பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தழை மறைவினில் அமுதத் தாரைகள் எங்கும் விழுந்துமே ஆநந்தம் பொங்கின ஆநந்தம் பொங்கும் அன்பின் பெருமைகள் சிந்தையில் தங்கின. மங்கை இளமலர் நெஞ்சில் எழுப்பிடும் மாண்புகள் கொஞ்சமோ? மாண்புகள் கொஞ்சும் இல்லறம் நாட்டிட வேண்டினேன் வஞ்சமோ? அங்கை சுருள்வதில் இன்பங்கள் பொங்கிட அருகில் வாவெனுமோ? அருகில் வாவெனும் வரமும் பெற்றிடில் அண்டமும் வானமுமாம், 274,