பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி பராசக்தி அன்ன தேவி பராசக்தி அன்னைதன் சிந்தை மகிழ்செல்வச் சேய்கள் யாம் மேவுமிடர்நமக் கொன்றுண்டோ வீரி மடியினில் வீற்றுளோம் (தேவி) முன்னைப் பழமறைச் சோதியாம் முக்கண்ண ரிைட பாகத்தில் மின்னும் பசுங்கொடி யன்னவள் விண்னெடு பாரெலாந் தந்தவள் (தேவி) அஞ்சும் பொருள் நமக் கில்லையே அந்தகன் தன்னையும் சாடுவோம் நஞ்சுங் குடித்திடப் பின்னிடோம் நன்மை பிறருக்கங் காகிடில் (தேவி) தீமை அவுணரை வீழ்த்தியே தேங்கும் குருதியில் ஆடுவாள் ஏம மெனச்சரண் பற்றினர் இன்பத மெய்திட நோக்குவாள் (தேவி) அண்ட முகட்டிலும் ஏறுவோம் அரிய செய்ல்பல சூழுவோம் கொண்ட கருமம் முடிவுறக் கோடித் தடைகளும் மீறுவோம் (தேவி) சிங்கஞ் சுமந்திட வந்தவள் ச்ே திசையெலாம் ஆளுவாள் எங்குந் துயர்மிடி நீக்குவாள் இன்பம் மல்ரக்கண் நோக்குவாள் (தேவி) 275