பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழிய வெடித்தது பெரும்புயல் வெருண்டது நெஞ்சம் இடித்தது வானம் இருண்டது வாழ்வு அகல்விளக் கதுவும் அணைந்தே மாய்ந்தது; அகதியாய் நின்றே அலறினேன்: "அந்தோ' என்றிரு கரங்களும் ஏந்தியே, விழிநீர் கன்றிட வெதும்பிக் காரிருளிடையே வானினை நோக்கினேன்: வேகமாய் வந்து காவெனக் கூவினேன்:"கருணையாய் என்றேன்; எங்கிருந் தோநீ வந்தன; என்முன் கங்குலைப் போக்கி நின்றன; ஆகா! இடியும் புயலும் எனக்கருள் புரியநீ எடுத்தபே ரறத்தின் கொடியெனக் கண்டேன். வாழிய தருமம் வாழிய கருணை! வாழிய உன்றன் மருள்விளை யாட்டே !