பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் வீரசுதந்திரம் பெற்றுவிட்டோம்-இந்த மேதினிமேல் நாம் தலை நிமிர்ந்தோம் பாரத தேவியும் முகம் மலர்ந்தாள்-அவள் பாதத்தைப் போற்றியே பாடிடுவோம் வேதமும் கீதையும் தோன்றினவாம்-இங்கு மெய்ந்நெறி வள்ளுவன் அருளினளும் ஒதுமெய்ஞ் ஞானநுண் கலைகளெல்லாம்-எங்கும் ஒப்பிலா தோங்கிய நாடிதிலே ஆயிரம் ஆண்டுகள் மாசடைந்தோம்-நல்ல ஆர்வமும் முயற்சியும் தேய்வடைந்தோம் போயினநாளெலாம் போயொழிக-இனிப் புதியதோர் பாரதம் செய்திடுவோம் காவிரி கங்கைபே ல் பெருகிவரும்-எங்கள் கண்மணி நாடிதன் பண்பினிலே யாவரும் நின்றுமே உலகமெலாம்-இன்பம் மேவிட நல்லறம் ஒதிடுவோம் காந்திமகான் சொன்ன சாந்தவழி-இந்தக் காசினி மேலெங்கும் நிலைபெறவே மாந்தர்கள் யாவரும் தோழர்களாய்-அன்பு வாழ்வினில் நின்றிடப் பணிபுரிவோம். 293