பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒ மீகாமா ஒ மீகாமா சாந்தி என்னும் பரந்தகடல் என்கண்முன்பு தோன்று இத்தோணியை அதில் மிதக்க விடு. (கிறது என்னை என்றும் பிரியாத தோழா உன்மடியில் என்னை வைத்துக் கொள் காலமென்னும் முடிவற்ற எல்லையற்ற பாதையில் துருவதாரகை தனது ஒளியைப் பொழிக. வீட்டின்பம் நல்கும் அருளாளா உனது கருணையும் பேரன்பும் எனது இறுதி யாத்திரைக்கு வேண்டிய 'வற்ருத செல்வமாக இருக்கட்டும். உலகத் தளைகள் அறுபடுக - அகிலாண்டம் தனது கரங்களில் என்னை அணைத்துக் கொள்ளட்டும் அறிவுக் கெட்டாத பரஞ்சுடர் முன்பு அச்சமின்றி நிற்க எனக்கு வன்மை அருள்வாயாக! (தாகூரின் கவிதையை அடியொட்டி எழுதியது.) 294