பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேல் வேல்வேல் வேலென்று சொல்லு-பழ வெவ்வினையை இக்கணமே கொல்லு வேல்வேல் வேலென்று சொல்லு-மிகு வெற்றியுடன் வாழ்வினிலே நில்லு வேல்வேல் வேலதுவே சக்தி-அதை வேண்டிப் பெறும்வழியே பக்தி வேல்வேல் வேலதுவே ஞானம்-அதன் மேன்மை உணர்ந்தநிலை மோனம் வேல்வேல் வேலென்று சொல்லு-வளர் வீரசக்தி யாலெதையும் வெல்லு வேல்வேல் வேலென்று சொல்லு-ஞான வேலினருள் ஜோதிவாழ்வில் நில்லு நீலமயில் ஏறிவரும் வேலன்-அன்னை நீலியுமை தந்தசுடர் பாலன் சீலநெறி நின்றவன்தன் ப்ாதம்-துதி செய்தவுடன் தந்தருள்வான் போதம் 298