பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புது வாழ்வு வானமெல்லாம் திரைச்சீலை மனக்கணலே வண்ணங்கள் கூனியில்லா ஒருகுடும்பக் குறிக்கோளாம் தூரிகையில் நவநவமாய்க் கற்பனையை நனவாக்கும் ஒவியங்கள் புவியெல்லாம் போர்த்திடவே புதுவீடு படைத்திடுவோம் அனுப்பொறிகள் அடித்தொண்டர் அன்பொன்றே ஆயுதமாய்ப் பிணிக்குறையும் பஞ்சமெனும் பேய்ச்சிறுமை யில்லாமல் இன்பமொன்றே எங்குமென எல்லோரும் கேளிரென நன்மையொன்றே செய்திடவே நயம்சிறந்த - போட்டியெழ பொங்கிவரும் புன்னகையும் புரையில்லா மெய்மொழியும் பங்கமில்லாப் பெருவாழ்வும் பாரென்னும் வீடிதனில் நாட்டிடவே எழுந்திடுவீர் நாற்றிசையும் விரைந்திடுவீர் நாட்டமெலாம் குறிக்கோளில் நலமெல்லாம் - - பெருக்கிடுவீர் பிரிவுகளும் பூசல்களும் பேதமையாம் சுயநலமும் குறுநெறியும் வஞ்சனையும் குள்ளநரிச் சூழ்ச்சிகளும் பொடிபடவே முனைந்திடுவீர் புதுவாழ்வு தோன்றிடவே திடமாக முன்செல்வீர் ஜெயபேரி ஒலித்தது.பார். 807