பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




காவிரி

எண்ணமெலாம் கொண்டுவந்தாய்;
என்னிளமை கொண்டுவந்தாய்;
தண்ணமுதம் தனக்கு ருசி.
தான்கொடுக்கும் தோழமையில்

கூடியவர் தமையெல்லாம்
கொண்டுவந்தா லாகாதோ?
வாடியிங்கு நான்தனியாய்
வருந்துவதைக் காணாயோ?

மூன்றுடலும் ஓருயிராய்
முடிந்தபெரு நட்பினுக்குச்
சான்றுனைப்போல் யாருண்டு?
சாய்பொழுதின் காலமெலாம்

முடிவில்லாப் பேச்சினிலும்
மோனஉளத் துடிப்பினிலும்
வடிகின்ற பேரன்பை
வரையாது பார்த்தாயே!

உன்னழகு நீண்டதுபோல்
உளத்துடிப்பும் நீண்டிருக்க
மன்னியவெம் பிரிவினில் நான்
மயங்குகின்றேன் காவிரியே.

85