பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கருக்கரிவாள்



எட்டிக் களை பறிக்கும்
           இடமெல்லாம் நிற்கேனோ ?
கட்டி மண்ணே நீ உடைக்கக்
        கைத்தடியாய் ஆகேனோ ?

ஏறுகின்ற வெயில் தணிக்க
        இன்னிழலாய்த் தழுவேனோ ?
மீறுகின்ற காதலுடன்
       மெல்ல மொழி பேசாயோ ?

  கருக்கரிவாள்-ரம்பம் போன்ற வாயை உடைய அரிவாள்; நெல் முதலிய பயிர்களை அறுக்க உதவுவது.
   
பாச்சான் கொடி-ஒருவகைச் சிறுமரம் - பசுமையான கொடி போன்று அதன் இலை இருக்கும்.
                     
                         39