பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமைப் பருவத்திலே காவிரித்தாய் எனக்குக் கவிதைப் பாலூட்டி வளர்த்தாள். எத்தனை எத்தனை நாட்கள் காவிரியின் கவிதை வனப்பிலே உள்ளம் திறை கொடுத்து அந்த நந்தா எழில் அரசியின் மருங்கிலே வெள்ளை மணல் மேடுகளிலும், ஓங்கி வளர்ந்த மரச் சோலை களிலும், ஆடிப் பெருக்கிலே முழுகித் தேய்ந்து வழுவழுப் பெய்திய சிறுசிறு பாறைகளிலும் அமர்ந்தும், நின்றும் நினை விழந்து கழித்திருக்கிறேன்! தெளிந்து ஒடும் தண்ணீரின் அருகிலே விளையாடி ஈர மணலிலே கட்டிய கோட்டைகள் எத்தனை கவிதை பொங்கக் கட்டிய மனக்கோட்டைகள் தாம் எத்தனை! • , - அன்று மலர்ந்த உள்ளம் இன்றும் கவிதையிலேயே பெருமகிழ்ச்சி யடைகிறது; என்றும் அது அப்படியேதான் இருக்கும். மாறினலோ வாழ்வே முடிந்ததாகவே நான் கருதுவேன். கவிதையில்லாத ஒரு வாழ்வும் வாழ்வாகுமா? கவிதையின் அன்பணேப்பிலே உயிர் தழைகின்றது: இளமையடைகிறது. அரவவனப்ப்ாலும், சந்தத்தாலும், கற்பனையாலும், உணர்ச்சி வேகத்தாலும், தொனிப் பொருளாலும் உயர்ந்த கவிதை வெளித் தோற்றத்தை ஊடுருவிச் சென்று யாவற்றிற்கும் பொதுவாக நிற்கும் உள்ளுணர்வோடு கலக்கிறது. இந்த ஆன்ம ஒருமைப் பாட்டால் விளையும் அனுபவமே கவிதையின் ஒப்பற்ற சிறப் பாகும். இதை அனைவரும் உணர்ந்து துய்க்கும்படி செய்வதே கவிஞனின் சீரிய பணியென்று நான் கருது கிறேன். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தூரன்_கவிதைகள்.pdf/4&oldid=924530" இலிருந்து மீள்விக்கப்பட்டது