பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எதிர்பார்த்தல்

(பல நாட்களாக நாயகனைப் பிரிந்திருக்கிறாள் ஒரு தலைவி. வேலையாக அவன் வெளியூர் சென்றிருக்கிறான். ஒரு நாட் காலையிலே திரும்பி வருவதாக அவனிடமிருந்து சேதி கிடைக்கிறது. அந்த இன்ப நாளுக்கு முந்திய நாளிரவிலே தலைவிக்கு உறக்கம் கொள்ளவில்லை. முழு நிலா இரவெல்லாம் அவளை வருத்துகிறது. அந்நிலவையே நோக்கி நெட்டுயிர்த்து இரவைக் கழித்த தலைவி அதிகாலையிலே ஒளிகுன்றி மறையும் நிலவைப் பார்த்துக் கூறுவதாகக் கவிதை,]

மேனி வெளுத்து
மறையும் நிலாவே,
நாளை யார் நின்செலவு
இரவெலாம் நோக்குவார்?

உலகம் குளிர்வித்து
என்னுளம் சுட்டாய்
செல்லுதி !
பொற்கிரணங்கள்
கீழ்த்திசைப் படர்ந்தன ;
நற்பொழுதோடு
நாயகன் வருவரால்.

42