பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மறைந்த ஜோதி

1948 ஜனவரி 30 ஆம் தேதி. பாரதத்தின் தனிச் சோதியாக விளங்கிய காந்தியடிகள் ஒரு வெறிய னுடைய துப்பாக்கிக் குண்டால் வீழ்ந்தார். பாரதம் கலங்கித் துடித்தது. உலகமே கண்ணீர் வடித்தது.

பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியான'காலச் சக்கரம்'என்ற பத்திரிகை இதழில் இப்பாடல் வெளியாயிற்று.

சொல்லெங்கே சொல்லெங்கே

 சொல்லவொணாத் துயரத்தைச் சொல்ல வந்தேன்சொல்லெங்கே?
 சொல்லடங்காத் துன்பமந்தோ! 

தூயவனை உத்தமனைச்

  சுட்ட பெருங் கொடுமையினை வாயுரைக்கத் தான்வருமோ?
  வார்த்தைகளும் நடுங்கினவே! 

அந்தோ பேர் அநியாயம்

   அவனிக்கோர் தனிச்சோதி

மங்கி யவிந்ததுவோ

   மதியிழந்த பாதகனால். 

பாரதத்தின் தனிப்பெருமை

   பாருக்கோர் வழிகாட்டி;

சீரிழந்த மக்களுக்குச்

   சிந்தையிலே நல்விளக்கு;


            46