பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மறைந்த ஜோதி

யாருக்கும் அன்புடமை

   யாருக்கும் நல்லுறவு-

மார்பினிலே குண்டேறி

  மாய்ந்திடவோ மாய்ந்திடவோ!

காந்தி மறைந்ததுவோ

  காசினியின் கண் போச்சோ?

ஏங்கித் தவித்திருந்த -

   இந்தியரைக் கரை சேர்த்த

ஓங்குபுகழ் மாலுமிதான்

   ஒய்வெடுக்கச் சென்றானே?

பாங்கிழந்த பாரதத்தே

   பணியெல்லாம் தீர்ந்ததுவோ?

அன்பென்று பேசியங்கே

   அன்றொருவர் வந்திருந்தார்-

நெஞ்சினிலே ஆணியிட்டு

   நீசர் வதைத்திட்டார்.

அன்பென்று சொல்லியிங்கே

அண்ணலிவன் இன்றுவந்தான்-

நெஞ்சத்தில் ஈயமிட்டு

நிலைகெட்டோன்கொன்றிட்டான். 

புத்தனைப் போல் அன்புருவாய்

  வாழ்ந்திருந்த புண்ணியனைச் சித்தனைப்போல் பற்றற்றுச்
   சேவை செய்த காந்தியினை


            47