பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 கவிதைச்சொல்

 உள்ளத்திலே பல சமயங்களில் எத்தனையோ உயர்ந்த என்னங்கள் தோன்றுகின்றன. மக்களுடைய இன்பத்திற்கும் மேம்பாட்டிற்கும் அவை உகந்தவை. எல்லோருடைய உள்ளத்தையும் கவருமாறு அவற்றையெல்லாம் அழகான சொற்களாலான சிறந்த கவிதைகளாக வெளியிட முடியுமானால் எத்தனை நன்மை பயக்கும்!
 உயர்ந்த எண்ணங்கள் உள்ளத்திலே எழுகின்றன-எப்படி? உருவறியா ஒவியங்கள் போல; பண்ணின் எழில் வீச்சுப்போல-கற்பணு சக்தி மிகுந்த இசைவாணன் ஒருவன் ஓர் இராகத்தை விரிவாக ஆலாபனம் செய்யும்போது அதன் சஞ்சாரத்தில் ஆங்காங்கே மின்னுகின்ற இராக பாவங்களைப் போல.
 பைந்தருவின் நிழல் -பச்சைமரத்தின் அடியிலே நிழல். அந்த நிழலிலே ஒரு தண்மை இருக்கிறது. வெய்யிலில் வாடி வந்தவன் அது தருகின்ற இன்பத்தை உணருகிருன். ஆளுல் அங்தத் தண்மை உருவில்லாது எங்கோ மறைந்து கிற்கிறது, அதுபோல.
 எண்ணப் பெருங்குகையில் இருள் படிந்த மூலையிலே உயர்ந்த கருத்துக்கள் இப்படி உருவறியாது எழுகின்றன.
 அஜந்தாக் குகை ஓவியங்கள் பல ஆண்டுகள் கண்ணிற்குப் புலப்படாது மறைந்திருந்தன.

ஆனால் அவை இன்று உலகத்தையே கவருகின்றன. எண்ணங்கள் அவ்வாறு உருப் பெற்று வெளிப்பட்டுப் பலரையும் கவரவேண்டும். அவற்றிற்கேற்ற கவிதைச் சொல் வேண்டும்.

பண்ணின் எழில் வீச்சில்

 பளிச்சிடுமின் தோற்றம்போல் பைந்தருவின் நீழலிலே
 படிந்துள்ள தண்மையைப் 
                        போல்
            51