பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6



சாதாரண வாழ்க்கை நிகழ்ச்சிகளே ஒரு பெரிய வயப புணர்ச்சியைத் தூண்டுபவையாக இருக்கின்றன. உள் ளத்திலே அலைமோதும் உணர்ச்சிப் பெருக்கும் எண்ணங் களும் இவ்வித வியப்புத் த ன் மை யை ப் பெற் றுள்ளன. இவற்றை உ ண ர் ந் து இ வ ற் ரு ல் கிடைக்கும் வேகத்தையும் சக்திக் கனலையும் சாந்தியென்ற அரணுல் சூழ்ந்து அதன் பயனுகப் பெற்ற அமைதித் தெளிவில் உருவாக்கப்படும் கவிதை இப்பணியை வெற்றி யுடன் செய்கின்றது.

காவிரி தந்த உள்ளக் கிளர்ச்சியால் அன்று எழுதிய கவிதை முதல் இன்று எழுதிய கவிதை வரை எல்லா வற்றையும் ஒருங்கு சேர்த்துப் பார்ப்பதே ஒரு தனி இன்ப அனுபவம்.

இம் முயற்சியிலே, சென்று மறைந்த பல நிலைகளிலும் நான் நின்று அந்த நிலைகளை மீண்டும் சுவைக்கிறேன். ஒவ்வொரு கவிதையும் ஒர் இன்பக் காட்சியை, உணர்ச்சிக் கிளர்ச்சியை, கற்பனைக் குமுறலை நினைவின்முன் தெளிவாக நிறுத்துகின்றது. அதில் விளையும் இன்பம், எண்ணப் பெருக்கு, ஆழ்ந்த சிந்தனை, அமைதி இவைகள் தனிப் பட்டவைகள்: ஆன்ம அனுபவங்கள். இவற்றை நீங்கள் என்னுடன் பகிர்ந்துகொள்ளவேண்டுமென்று ஆர்வத்தோடு அழைக்கிறேன். வணக்கம்.


பெ.தூரன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தூரன்_கவிதைகள்.pdf/5&oldid=1480375" இலிருந்து மீள்விக்கப்பட்டது