பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அலைகள்

வெள்ளைக் குதிரையைப் போலே

 துள்ளிக் குதித்திடும் அலேயே வேடிக்கை எத்தனை விந்தைகள் 
                    செய்கிருய்
 ஒடித் திரண்டு சுருண்டாய்-பின் 

ஓங்கி எழுந்து

        புரண்டாய்(வெள்ளைக்)
              

புள்ளிக் கருநாகம் போலே

 துள்ளிப் படமெடுக் கின்ருய்

போருக்குச் சென்றிடும்

            வீரப்படையென்னப்
 பாருக் கணியணி யாக-முன் 
 பாய்ந்து பயங்கரம் செய்தாய் 
                 (வெள்ளைக்)

நீலப் பெருங்கடல் வேந்தன்

 மேலுக் கெழுந்து கொதித்தே நெற்றி சுருக்கவும் நீயுடன் 
                   தோன்றியே
 வெற்றி முரசொலி தருவாய்- 
                          சிறு

மின்னல் அரவமும் புரிவாய்

                 (வெள்ளைக்)

மல்லிகைப் பூவினைப் பறித்து

 முல்லை மலருடன் தொடுத்து வண்ணமாய் உன்முடி வைத்து 
                     நடமிட்டுப்
 பண்ணும் குழைந்திட வந்தே- 
                        நிலப்
 பாவைக் குச்சூடுகின் முயோ? 
                 (வெள்ளைக்)
              57