பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சத்தியம்


வீசுபுகழ் பொங்கியெழ
           மேதினியில் ஓங்கிநின்றார்
 புத்தனுக்குத் தம்பியவர்
       பொன்னடியைப் பின்பற்றி
 மெத்தக் கருணையினால்
        மீண்டும் வந்த தம்பியிவர்
 காந்தி மகான் சாவாரோ
       காலனவரைத் தொடுமோ ?
 சாந்தமுனி சாகவில்லை
      சத்தியமும் சாகாது ;
 ஓருடலில் கட்டுண்டு
       உலவி வந்த மெய்ச்சுடர்தான்
 சீருடனே மாந்தர்களின்
       சிந்தையெலாம் நிறைந்ததுவே.
 காயமிது சத்தியமோ
        காந்தி யொன்றே சத்தியமே.
 காயமைந்து பூதத்தில்
        கலந்து மறைந்திடவும்
 காந்தியெனும் சத்தியந்தான்
      காரீயக் குண்டேறிச்
 சிந்துங் குருதியினல்
      சிரஞ்சீவி யாயிற்றே.
 ஆண்டொருநூற் றைம்பதிந்த
       அவனியிலே வாழ்வென்றார்
 ஆண்டுக் கணக்குகளை
       அழித்துலகம் உள்ள்வரை

            66