பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சத்தியம்


வாழ வளர்ந்து விட்டார்
          வாழியவோ சத்தியமே.
 ஆழநினைந் தாலடிகள்
      அவனி உய்ய வந்தவராம்
 பாரதத்தின் விலங்ககற்றும்
      பணியவற்குப் பெரிதல்ல ;
 பாரினிலோர் புதுநெறியைப்
        பரப்பிடவே காந்தி வந்தார்.
 அறிவுத் திறமோங்கி
       அழிவுக்கே படை செய்யும்
 நெறியறியாப் பூமியிலே
       நேர்மையன்பு குன்றியதால்
 மனிதப் பெருஞ்சாதி
       மாய்ந்தழிந்து போகாமல்
 புனிதனிங்கு சத்தியத்தின்
      புன்னகையாம் அன்பஹிம்சை
 மார்க்கத்தைக் காட்ட வந்த
       மகாத்மாவென்றறிவீரே.
 ஓர்ந்துணர்ந்து வாழ்விலவன்
       உபதேசம் கொள்ளாமல்
 அணுவைப் பிளந்திடுவோம்
       அழிப்போம் பகைவர்களை
 எனப் பேசி இறுமாந்தால்
      இவ்வுலகம் நாசமுறும் :
 மாற்றலரை மாய்க்கு முன்னர்
      மாநிலமே வீழ்ந்திடுமால்.

                 67