பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க காந்தி


தக்கதோர் நெறியை அன்பால்

   சமயத்திற் குகந்தவாறு

மக்க ளுக் களிக்கவந்த

   மகாத்மா நீ வாழ்க வாழ்க!


வெறுப்பினை அன்பால்வெல்லும்

  விதந்தனை வகுத்தாய்உள்ளச் 

செருக்கினை அடக்கந் தன்னல்

ஜெயித்திடும்வாழ்வு கொண்டாய் நெருப்பினைக்கக்கும்வெஞ்சொல்
   நேரலார் பகைமை யெல்லாம் சிரிப்பினல் மறையச் செய்யும்
   தீரனீ!காந்தி! வாழ்க!


அறிவினைப் பெற்று மாந்தர்

   அறவினை துறந்திந்நாளில் மறவினை எண்ணி வையம்
  மாய்ந்திடப் படைகள் கண்டார் வெறியினைப்போக்கி மேலாம்
    மெய்ந்நெறி காட்ட வந்த பொறைதயை அஹிம்சைஅன்பாம்
 பொன்மொழிக் காந்தி! வாழ்க! 


கிருஷ்ணன் கையில் சுழன்ற சக்கரம் அன்று சமர் செய்ய ஒலித்தது. இன்று காந்தி மகான் கையில் சுற்றுகிற ராட்டைச் சக்கரம் சாந்தியின் கீதம் பாடுகிறது.


            70