பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அன்னை கையின்

மிடிமை கொன்று கொடுமை நீக்கி
            வேந்தர் போல வாழுவோம்;
 விந்தை யென்றே உலகம் போற்ற
       மேன்மை யாவும் காணுவோம்;
 
               4.

 மனிதர் யார்க்கும் பொதுநல் நீதி
       வாழ்க்கை இன்பம் பொதுவிலே;
 மனிதர் யார்க்கும் பொதுநல் உடமை
        வழங்கி யன்பு கூட்டுவோம்;
 கணித ஞானம் கலைகள் ஞானம்
        கவிதை ஞானம் ஓங்கவே
 கடவுள் என்னும் உலகின் சக்தி
     காணும் ஞானம் ஓங்கவே


                5

  செயல் பெருக்கி மயல் கருக்கித்
        தீமை போக்கி வாழுவோம்;
  சிந்தை விரிவில் தோன்றுங் கனவைச்
         செய்து காட்டி மகிழுவோம்;
 புயல் வெடித்த காடு போலப்
      புன்மை வீழச் சாடுவோம்;
 புனிதபார தத்தை யென்றும்
      போற்றி ஒன்றாய்க் கூடுவோம்.


            77