பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விலையில்லா மாணிக்கம்


விலையில்லா மாணிக்கம் வேந்தர்களும் வாங்கரிதாம் அலைகடலால் ஈன்றெடுக்கா அழகுவளர் ஆணிமுத்து முகலாயப் பேரரசர் முடிதிகழாக் கோஹிநூர் அகல்வானில் தோன்றாத அற்புதநற் புதுவெள்ளி மன்பதையின் வறுமைதவிர் மாண்புடைய நல்வயிரம் புன்முறுவல் தவழ்முகத்துப் போதுமென்ற நன்மனமே.


          83