பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 நினைவு அலைகள்

ஆண்டு நூறுக்கு மேலிங்கு யாவரும்

   அமரவாழ்வு பெற வழி
   காணுவேன்; 

யாண்டும் பூவும் பொலிவும் கலைகளும்

   ஈண்டிஓங்கும் பலபணி 
   பூணுவேன்; 

மூண்டகாதல் மடந்தை முறுவலில்

   மோதும் உள்ளக் கருத்தும் 
   முடிப்பன்யான்; 

நீண்ட நல்லின்ப வீடிது தானென

   நீள் நிலத்தையும் மாற்றி 
    அமைப்பனே.

ஐம்பதில் :

மண்ணிலே யெனக் குள்ளதெண் காணியே,

   மற்றோர் காணி பிடித்திடச் 
   சூழுவேன் ; 

வெண்ணெய் போலொளிர் சுண்ணநற் சாந்தினால்

   வீடுகட்டி நான் சொந்தமாய் 
   வாழுவேன்; 

பெண்ணிலே யொரு பேதையைக் கொள்வதால்

 பிறவிநோய்தனைப்பெற்றதைத் 
 தேர்ந்துளேன் 

பண்ணும் ஊழியர் தம்மைப் பிழிந்துமே

   பங்கயத் திருச் சேர்க்கவே 
   நாடுவேன்.

மாந்தர் யாவரும் ஒர்நிலை யென்னுமோர்

  வாசகம் பொய்க் கதையெனக் 
  கண்டுளேன்; 

காந்தி கொண்டபொற் காசுகள் ஈட்டலே

   கருதுவேன் இனிக் கனவுகள் 
   கண்டிடேன்; 

கூந்தலுக் கொரு வாசநெய் வேண்டுவார்

   கூறைச்சேலை நகையெனக் 
   கூவுவார் 

சாந்தியோ டிங்கு வாழவிடுவரோ?

   சற்றுமில்லை நான் முற்று 
   மறிந்திட்டேன்.


            89